News

நடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘ஓ ! சுகுமாரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

News
*நடிகர் திரு வீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்திருக்கும் 'ஓ ! சுகுமாரி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு* டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஓ! சுகுமாரி' - திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரும் முதன் முதலாக திரையில் ஒன்றிணைந்திருக்கும் இந்த திரைப்படம் - காதல், நகைச்சுவை மற்றும் கிராமிய பின்னணியின் அழகிய அம்சங்கள் நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்ற உறுதியை அளிக்கிறது. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ்( Gangaa Entertainments) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்திருக்கிறார். 'ஓ! சுகுமாரி ' படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கான ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லரில், 'த...
துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின்  ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

News
*துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!* துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது… ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிறைந்ததாக வெளியாகியுள்ளது! பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான் தற்போது அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படமான #DQ41-ல் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான SLV Cinemas சார்பில் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக (#SLV10) உருவாகி வருகிறது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இஷான் சக்சேனா பணியாற்றுகிறார். இந்த மனதை வருடும் காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். காதல், நகைச்சுவ...
’இதயம் முரளி’   விமர்சனம்

’இதயம் முரளி’   விமர்சனம்

News
அமெரிக்காவில் வசித்து வரும் நாயகன் அதர்வாவின் திருமண ஏற்பாடுகளை அவரது மாமா நட்டி தீவிரமாக செய்து வருகிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் தனது நண்பர்களுடன் விமானத்தில் இந்தியா திரும்பும் அதர்வா அதே விமானத்தில் பயணிக்கும் பகத் பாசிலை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்.இருவரும் உரையாடத் தொடங்க தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை பகத் பாசிலிடம் அதர்வா சொல்லத் தொடங்குகிறார்.திருச்சியில் பள்ளிப்  பருவத்தில் டியூஷனில் ப்ரீத்தி முகுந்தனை முதன்முதலாகப் பார்க்கும் அதர்வா அவர்மீது காதல் கொள்கிறார். டியூஷன் சென்டர் டென்னிஸ் மைதானம் என ப்ரீத்தி செல்லும் இடமெல்லாம் அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து தனது காதலை மனதிற்குள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்.ஒருநாள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அதர்வாவை வீட்டிற்கு அழைக்கிறார் ப்ரீத்தி அங்கு சென்று தனது காதலை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கும் அதர்வாவுக்கு எதிர்...
லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் அசுரன் JK

லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் அசுரன் JK

News
கமல் ரஜினி என்கிற இரண்டு ஜாம்பவான்களுடன் பணியாற்றிய அனுபவம்: நடிகர் அசுரன் ஜெகே! லிங்கம் வெப் தொடர் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்த நடிகர் அசுரன் JK கமல், ரஜினி என்கிற இரண்டு லெஜெண்ட்களுடன் பணியாற்றிய அனுபவங்களைப் பெரும் பாக்கியமாக நினைக்கிறேன். அசுரன் நடிகர் JK. திரைப்படங்களில் சில முகங்கள் பெயர் தெரியாமலேயே மனதில் பதிந்து விடும்.யார் அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் என்று ரசிகர்கள் தேடும் அளவிற்கு சிலரது நடிப்பு இருக்கும் .அப்படி ஒரு வித்தியாச முகத்துக்கு சொந்தக்காரர் தான் 'அசுரன்' ஜெகே.இவரது இயற்பெயர் ஜெய்கிருஷ்ணா.வெற்றிமாறனின் 'அசுரன்' தொடங்கி 'சாணிக்காயிதம்', 'கேப்டன் மில்லர்', 'லால்சலாம்', 'வா வாத்தியார்', 'கர', 'கருப்பு' , 'ப்ளாஸ்ட்' என்று தொடர்ந்து அண்மையில் வெளிவந்த 'லிங்கம்' இணையத் தொடர் வரை தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளவர் இந்த 'அசுரன்' ஜெகே.இ...
ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

News
*ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!* சென்னை: லால்வானி குடும்பம் சார்பில் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் திங்கள்கிழமை ஹர்ஷ் மற்றும் சந்தனா ஆகியோரின் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் திரைப்படத்துறை, தொழில், சட்டத் துறை என பல்வேறு துறைகளைச சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த வரவேற்பு விழாவை பிரகாஷ் சந்த் லால்வானி, சஞ்சய் லால்வானி, பிரவீன் லால்வானி, சுஷில் லால்வானி மற்றும் அவர்களது குடும்பத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களை அன்புடன் வரவேற்று, இனிய விருந்தோம்பலுடன் உபசரித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் கலந்து கொண்டு, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்...
’லவ் ஓ லவ்’   விமர்சனம்

’லவ் ஓ லவ்’  விமர்சனம்

News
வேலைக்காக துபாய் செல்ல தயாராக இருக்கும் நாயகன் பவிஷ்,நாக துர்காவை காதலித்து ஏமாற்றிவிட்டதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அங்கு வரும் மாதர் சங்கத் தலைவியான வனிதா,பவிஷுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என போராட்டம் நடத்துகிறார்.இதனையடுத்து, இன்ஸ்பெக்டரான செல்வராகவனிடம் பவிஷ் தனது காதல் கதையை சொல்லத் தொடங்குகிறார்.நாக துர்காவை முதன்முதலில் பார்த்தவுடனே பவிஷ் காதலில் விழுகிறார்.அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அளவுக்கு அவளை ஆழமாக நேசிக்கிறார்.ஆனால் நாக துர்காவின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் பவிஷின் பொருளாதார நிலையை மீறியதாக இருக்கின்றன.காதலியின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தனது வசதிக்கு மீறி செலவு செய்யத் தொடங்குகிறார் பவிஷ். கையில் பணம் இல்லாத நிலையிலும் கடன் வாங்கி அவளுக்காக செலவு செய்கிறார். காதலை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த இ...
’ஐ , நோபடி’   விமர்சனம்

’ஐ , நோபடி’  விமர்சனம்

News
வஞ்சியூரில் உள்ள ஒரு வங்கியில் மூன்று பேர் துணிகரமாக கொள்ளையடிக்கிறார்கள். அப்போது வங்கியில் இருந்த பிரித்விராஜ் சுகுமாரனை முகத்தை மூடி பிணைக் கைதியாக தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள்.பின்னர் ஒரு இடத்தில் அவரை இறக்கிவிடும் போது கொள்ளையர்களில் ஒருவரின் முக்கியமான அடையாள அட்டை எதிர்பாராத விதமாக பிரித்விராஜின் கையில் சிக்குகிறது. இதே சமயம் எதிர்பாராத விதமாக நிகழும் விபத்தில் அந்த மூன்று கொள்ளையர்களும் உயிரிழக்கிறார்கள்.பிரித்விராஜின் கையில் சிக்கிய அடையாள அட்டையை ஆதாரமாகக் கொண்டு கொள்ளையர்கள் யார் என்பதை போலீசார் கண்டுபிடிக்கிறார்கள்.ஆனால், அவர்கள் ஏற்கனவே விபத்தில் உயிரிழந்துவிட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கு உள்ளது என்பதைக் கண்டறிய முடியாமல் போலீசார் திணறுகிறார்கள். இந்நிலையில் இந்த வங்கியில் பிரித்விராஜ் மற்றும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் எந்த விதமான சேமிப்பு கணக்கு இல்லாமல் இர...
“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு”  விமர்சனம்

“லட்சுமிகாந்தன் கொலை வழக்கு” விமர்சனம்

News
நீதிபதி கன்யா பாரதி முன் அருவி மதன் கொலை குற்றவாளியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார் அருவி மதனும் கொலை செய்ததாக ஒப்புக்கொள்கிறார்.ஆனால் நீதிபதி கன்யா பாரதி அதை நம்பவில்லை. இருந்தாலும் தீர்ப்பு நாளைக்கு வழங்கப்படும் என்று வழக்கின் தீர்ப்பை மறுநாள் தள்ளி வைத்து விடுகிறார்.அன்று இரவு முழுவதும் நீதிபதியால் தூங்க முடியவில்லை. அப்போது கடலூரில் 1972 ஆம் ஆண்டில் தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை நினைத்து பார்க்கிறார் நீதிபதி கன்யா பாரதி 1972 ஆம் ஆண்டில் வெற்றி கொலைக் குற்றவாளியாக நீதிபதி முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.நீதிபதியின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் மௌனம் சாதிக்கிறார். ஆனால் கொலைக் குற்றத்தை மட்டும் ஒப்புக்கொண்டு தனக்கு தண்டனையை வழங்கிவிடுங்கள் என்று கூறுகிறார். இந்த வழக்கிற்கும் 2022 ஆம் ஆண்டு நீதிபதி கன்யா பாரதி விசாரிக்கும் வழக்கிற்கும் என்ன தொடர்பு நீதிபதி கன்யா பாரதி அருவி ம...
ராவ் பகதூர்  விமர்சனம்.

ராவ் பகதூர் விமர்சனம்.

News
சத்யதேவ் மரணத்தை எதிர்நோக்கும் நிலையிலும் மன உளைச்சலாலும் குற்றவுணர்வாலும் தவிக்கும் அவரது வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் உண்மைகளே படத்தின் திரைக்கதையாக மாறுகின்றன. கடந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறி சொல்லப்படும் கதை படத்தின் முக்கிய அம்சமாக அமைகிறது.மனித மனத்தின் சிக்கல்களையும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிறவெறி,மற்றும் சாதி,பரம்பரை பெருமை போன்ற கருத்துகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ளதே மீதிக்கதை. ராமப்பா ராவ் பகதூராக சத்யதேவின் நடிப்பு உடல்மொழி,முகபாவனை,உணர்ச்சி வெளிப்பாடு என ஒவ்வொரு காட்சியிலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மற்றும் தீபா தாமஸ்,விகாஸ் முப்பாலா,பாலா பரசர் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். கார்த்திக் பர்மர் ஒளிப்பதிவும்,சமரன் இசையும் கதைக்கு கூடுதல் பலம். வழக்கமான சினிமாவை தவிர்த்து,நாடக மேடை பாணியையும் கலைநயமிக்க காட்சியமைப்பையும் பயன்படுத்தி இன்ற...
‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !

News
*‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் மேலும் ஒரு அதிரடி போஸ்டர் !* கோபமடைந்த கூட்டத்தை எதிர்கொள்ளும் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே! நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது! Zee Studios மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இப்படம், ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. நச்சு பூச்சிக்கொல்லி விவசாயம் மனித உடல்நலத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த சமூக அக்கறை கொண்ட நீதிமன்ற பின்னணித் திரைப்படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையுடன் எடுத்துரைக்கிறது. வெளியான...